T R I C H Y
     
City Update





All Events

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி, உறையூர் லிங்கம் நகரில் புதிய நியாய விலைக்கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (07.07.2023) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, குடும்ப அட்டைதார்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன். இ.ஆ.ப.,அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், திரு.அரசு, இணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம் திருமதி.முத்தமிழ்ச்செல்வி, கூட்டுறவு சார்பதிவாளர் பொது விநியோகத்திட்டம் திரு.தமிழ்செல்வன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ஹபிபுல்லா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி, உறையூர், லிங்கம் நகரில் புதிய நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (07.07.2023) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப.,அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், திரு.அரசு, இணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம் திருமதி.முத்தமிழ்ச்செல்வி, கூட்டுறவு சார்பதிவாளர் பொது விநியோகத்திட்டம் திரு.தமிழ்செல்வன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ஹபிபுல்லா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கீழ்கொத்தமங்கலம் பகுதியில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.3.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின்மோட்டார் மற்றும் PVC தண்ணீர் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (06.07.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார், இ.ஆ.ப.,அவர்கள், மாண்புமிகு மேயர் திரு. மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, சின்ன கொத்தமங்கலம் பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (06.07.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார், இ.ஆ.ப.,அவர்கள், மாண்புமிகு மேயர் திரு. மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தில்லைநகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் அமையவுள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கான இடத்தினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (24.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப., அவர்கள், நகரப்பொறியாளர் (பொ.) திரு.சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (24.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப., அவர்கள், நகரப்பொறியாளர் (பொ.) திரு.சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (24.06.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.ஸ்டாலின் குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.நேரு, நகரப்பொறியாளர் (பொ.) திரு.சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூரில், அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று (24.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு. இரா.வைத்திநாதன்.இ.ஆ.ப.,அவர்கள், நகரப் பொறியாளர் (பொ.) திரு. சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்